யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிப்பு (Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(08.10.2021) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வில்வம் பழ யோகட் பானத்தின் கண்டுபிடிப்பாளர் உரிமத்தைக் கொண்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சார்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், உற்பத்தி உரிமத்தைப் பெற்றுக்கொண்ட முல்லை பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் சி.தவசீலனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:-எஸ்.ரவி)