உலகமே வியக்கும் வண்ணம் நல்லைக் கந்தன் ஆலயத்தை ஆற்றுப்படுத்திய சமயக் காவலரை சைவ உலகம் இழந்து விட்டது: செஞ்சொற்செல்வர் இரங்கல்

உலகமே வியக்கும் வண்ணம் நல்லைக் கந்தன் ஆலயத்தைச் சீரிய வழியில் ஆற்றுப்படுத்திய ஆளுமை மிக்க சமயக் காவலரை சைவ உலகம் இழந்து விட்டது.எவ்வித ஆடம்பரமும் இன்றிப் பக்தரோடு பக்தராக நின்று ஆலயத்தைக் கட்டி வளர்த்த பெருந்தகையை இனி எங்கே காண்போம்? என அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று சனிக்கிழமை(09.10.2021) தனது 92 ஆவது வயதில் கொழும்பில் சிவபதமடைந்தார். அவரது மறைவையொட்டி செஞ்சொற்செல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் முழுமையான தொகுப்பைக் கீழே காணலாம்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)