புத்தாக்க அரங்க இயக்கத்தின் வாராந்த இணையவழி அரங்க கதையாடல் இன்று

புத்தாக்க அரங்க இயக்கம் வாராந்தம் நடத்தும் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(10.10.2021) இரவு-07 மணியளவில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், மக்கள் தொடர்பாளரும், தயாரிப்பு நிர்வாகியுமான ஜெனோசன் ராஜேஸ்வர் ”சினிமாத்துறையின் செயற்பாட்டிற்கு நாடகத்தின் பங்களிப்பு” எனும் விடயத்தில் கதையாடவுள்ளார்

ஏற்புரையினைப் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 6473348261,கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)