வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டு சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் (Photo)

வடமாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்று திங்கட்கிழமை(11.10.2021) நண்பகல்-12 மணியளவில் வடமாகாணச் சுகாதார சேவைகள் பணிமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினைச் சென்றடைந்ததையடுத்து அங்கும் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாகத் தற்காலிகச் சுகாதார உதவியாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 62 பேருக்குச் சுகாதார அமைச்சின் நிரந்தர நியமனக் கடிதங்கள் சில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்தும், தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை உறுதி செய்யக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(செய்தித் தொகுப்பு:-எஸ்.ரவி)