யாழ்.மாநகர முதல்வரைச் சந்தித்த இலங்கைக்கான கனடாத் தூதுவர் (Photo)

யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மக்கினொன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை(12.10.2021) யாழ்.மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள், யாழ்.மாநகரசபையின் செயற்பாடுகள், யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி, தமிழ்மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

சுமார் ஒன்றரை மணி நேரமாக இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மக்கினொனுக்கு யாழ்.மாநகர முதல்வர் நினைவுச் சின்னமொன்றைச் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுக் குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.

இதேவேளை,மேற்படி சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்து கொண்டிருந்தார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)