விண்வெளிக்குச் சென்று திரும்பிய அதிகூடிய வயது மனிதர் (Photos)

உலகப் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடரில் நடித்த வில்லியம் சாட்னர் விண்வெளிக்கு அதிகூடிய வயதில் சென்ற மனிதர் என்ற சாதனையைத் தனதாக்கியுள்ளார்.

90 வயதான சாட்னரை தாங்கிச் சென்ற என்.எஸ்-18 என்ற விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ப்ளூ ஒரிஜின் பிரதேசத்தில் இன்று(13) வெற்றிகரமாகத் தரையிறங்கியதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விண்வெளிக்குச் சுற்றுலா சென்ற நான்கு பேர் கொண்ட குழுவில் வில்லியம் சார்ட்னரும் ஒருவராக இடம்பிடித்து இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பான விண்வெளி தொடர்பான பிரபல கற்பனைத் தொடரான ஸ்டார் ட்ரெக்கில் வில்லியம் சாட்னர் நடித்திருந்தார். இந்நிலையில் தனது நிஜ வாழ்க்கையிலும் அவர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.