எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது!

யிலேயே

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லுதல் காரணமாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விற்பனையில் பாரிய நட்டத்தை எதிர் கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில் எரிபொருள் விலை தொடர்பான பிரச்சினையை அவர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளார்.

எனினும், தற்போதைய நிலையில் எரிபொருளின் விலையை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.இந் நிலையிலேயே
மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.