ஐ. நா சபையின் கண்காணிப்பில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்: சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஐக்கியநாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12.10.2021) யாழில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது குறித்துக் குவாட் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கு எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு குவாட் நாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவிடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.