யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள்….

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(14.10.2021) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.புங்குடுதீவு, நடுவுக்குறிச்சி, மடத்துவெளி, குறிகட்டுவான், கேரதீவு, இறுப்பிட்டி, ஆலடிச் சந்தி, வல்லான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)