யாழில் பிரசித்திபெற்ற ஆலயங்களுக்குள் சப்பாத்துக்களுடன் சென்ற பொலிஸ் உயர் அதிகாரி! (Photo)

யாழ்.மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை(13.10.2021) நண்பகல் வருகை தந்த பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன வரலாற்றுப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீ தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்கு நேரடியாகச் சென்று தரிசனத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சைவசமய விதிமுறைகளை மீறும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் மேற்படி ஆலயங்களுக்குள் சப்பாத்துக்கள் அணிந்து சென்றுள்ளமை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)