புல்லுக்குளத்திற்குச் சென்றடைகின்ற நீரின் அளவை அதிகரிக்க நடவடிக்கை (Photos)

யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதான வெள்ள வடிகால் ஊடாகப் யாழ்.நகரில் அமைந்துள்ள புல்லுக் குளத்திற்குச் சென்றடைகின்ற நீரின் அளவை அதிகரிக்கும் நோக்குடன் புல்லுக் குளத்திற்கு அருகிலுள்ள வடிகாலில் நீர் செல்லுகின்ற பகுதியை அகலப்படுத்தி ஆழப்படுத்துகின்ற கடினமான பணி இன்று வியாழக்கிழமை(14.10.2021) முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இன்றைய தினம் குறித்த பணி மேற்கொள்ளப்படுகின்றது.

(செய்தித் தொகுப்பு:-எஸ்.ரவி)