கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கொரோனாத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நாளாந்தம் பொதுமக்கள் பொதுச் சுகாதாரக் காரியாலங்களுக்குப் பிரவேசிப்பதாகவும், அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாகத் திருமணங்கள் மற்றும் மரண வீடுகளில் பொதுமக்கள் ஒன்றுகூடினால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.