இளம் ஊடகவியலாளர் பிரகாஸின் 45 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை

கடந்த-02.09.2021 இல் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் 45 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (16.10.2021) முற்பகல்-11 மணியளவில் கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டியில் அமைந்துள்ள ஊடகவியலாளர் பிரகாஸின் இல்லத்தில் இடம்பெறும் என மேற்படி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

மேற்படி நிகழ்வில் மதகுருக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்களின் நினைவுரைகள் நடைபெறவுள்ளது.

இதேவேளை,குறித்த அஞ்சலி நிகழ்விலும், மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)