குப்பிழான் கெளரி அம்பாள் ஆலயத்தில் சற்றுமுன் வாழைவெட்டு (Video, Photos)

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15.10.2021) சற்றுமுன் வருடாந்த நவராத்திரி விழாவின் விஜயதசமிப் பெருநாளை முன்னிட்டு மானம்பூத் திருவிழா(வாழைவெட்டு) நடந்தேறியது.

இன்று காலை அம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் உள்வீதி, வெளி வீதியில் உலா வரும் திருக் காட்சி இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் முற்பகல்-10 மணியளவில் வாழைவெட்டு நிகழ்வு நடந்தேறியது.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்)