நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட இரு வீதிகளைப் புனரமைக்க வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் இணக்கம்(Photo)

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரனுக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை(26.01.2022) மேற்படி பிரதேச சபையில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் கேட்டுக்கொண்டதற்கு அமையப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கொக்குவில் சந்தியிலிருந்து ஆனைக்கோட்டை செல்லும் ஆடியபாதம் வீதி மற்றும் பொற்பதி வீதி ஆகிய வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கும், கொக்குவில் சந்தி மற்றும் கல்வியங்காட்டுச் சந்தி ஆகிய சந்திகளில் வீதிச் சமிக்ஞைகள் இடும் நோக்குடன் அந்த இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை அகலிப்புச் செய்யவும் இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டது.

(செ.ரவிசாந்)