குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய தை அமாவாசை தினத்தை ஒட்டிய அபிராமிப்பட்டர் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை(31.01.2022) மாலை இடம்பெறவுள்ளதாக மேற்படி ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ. சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.
அன்றையதினம் பிற்பகல்-05.30 மணியளவில் விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து இரவு-07 மணிக்கு அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி ஓதும் நிகழ்வும் நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)