புதிய உலக அழகியாக மகுடம் சூடினார் போலந்து பெண் கரோலினா!(Photos)

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய 70 ஆவது உலக அழகிப் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்றது.

குறித்த போட்டி நிகழ்ச்சி போர்ட்டோ ரிகாவின் சான் ஜுவான் எனும் இடத்தில் உள்ள கோகோ கோலா மியூசிக் ஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த அழகிகள் குறித்த போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் போட்டியில் அமெரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, வட அயர்லாந்து மற்றும் கோட்டே டி ஐவரி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளைப் பின்னுக்குத் தள்ளி “உலக அழகிப் போட்டி-2021” பட்டத்தைப் போலந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கரோலினா பைலாவ்ஸ்கா தட்டிச் சென்று மகுடம் சூடினார்.

அமெரிக்கா சார்பில் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீசைனி முதல் ரன்னர் அப்பாக தேர்வானார்.

இதேவேளை, புதிய உலக அழகியாகத் தேர்வாகி உள்ள போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவிற்கு சர்வதேச ரசிகர்களும், பிரபலங்களும் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.