யாழ்.பல்கலையில் நாளை சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை

ஈழத்துச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகள் நினைவுப் பேருரை-2022 நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (25.3.2022) பிற்பகல்-3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும்.

மேற்படி நிகழ்வில் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வரும், அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்தவருமான ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் கலந்து கொண்டு ‘யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளும் சர்வதேசத்தில் அவரது சிந்தனைப் பரவலாக்கமும்’ எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)