இணுவிலில் செவ்வாயன்று சதுரங்கச் சுற்றுப் போட்டி

இணுவில் பொது நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற ஏற்பாடாகி கடந்த வாரம் பிற்போடப்பட்ட சதுரங்கச் சுற்றுப் போட்டி-2022 நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(12.4.2022) காலை-7.30 மணியளவில் நூலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி போட்டி பாடசாலை மாணவர்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடாத்தப்படவுள்ளது.

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் நாளை திங்கட்கிழமைக்கு(11.04.2022) முன் விண்ணப்பப் படிவங்களை நூலகத்தில் பெற்று அல்லது முழுப் பெயர், பாடசாலை, பிறந்த திகதி, பால், வயது என்பவற்றைக் குறிப்பிட்டுக் கையெழுத்தினால் சமர்ப்பிக்குமாறு போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

போட்டிக்கு வரும் போது போட்டியாளர்கள் சதுரங்கப் பலகையினைக் கொண்டு வருமாறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை,மேலதிக தொடர்புகளுக்கு 0212241930, 0217903322 மற்றும் 0779675599 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)