யாழில் வைகாசி விசாகப் பொங்கலும் சிறுவர்களின் பஜனை நிகழ்வும்(Photos)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கொழும்புத்துறை சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(16.5.2022) வைகாசி விசாகப் பொங்கலும், சிறுவர்களின் பஜனை நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார், சக்கரம் சமுக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் இ.த.கமலநாதன், பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)