சாவகச்சேரியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


சாவகச்சேரி தென்னகத் தாரகை விளையாட்டுக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேற்படி விளையாட்டுக் கழக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை(21.5.2022) காலை-9 மணி முதல் பிற்பகல்-1 மணி வரை டச்சு வீதி, சாவகச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீபழனி அறநெறிப் பாடசாலையில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர் களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க விரும்பும் குருதிக் கொடையாளர்கள் 0777033433 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)