சுழிபுரத்தில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

சுழிபுரம் மேற்குப் பாரதி கலைமன்றத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) காலை-9 மணி தொடக்கம் பிற்பகல்-2 மணி வரை சுழிபுரம் மேற்குப் பாரதி கலைமன்றத்தின் முன்பள்ளி மண்டபத்தில் நடைபெறும்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க விரும்பும் குருதிக் கொடையாளர்கள் 0773163621 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)