யாழில் நாளை இரண்டாம் சங்கிலிய மன்னனின் 403 ஆவது சிரார்த்த தின விழா

யாழ்.இராட்சியத்தின் இறுதித் தமிழ்த்தேசிய சைவ மன்னன் மாவீரன் இரண்டாம் சங்கிலியனின் 403 ஆவது சிரார்த்த தின விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) யாழில் சங்கிலிய மன்னன் நினைவு தினக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

காலை-9 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள இரண்டாம் சங்கிலிய மன்னனின் உருவச் சிலையடியில் அஞ்சலி நிகழ்வும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கையின் 25 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் சிரார்த்தம் இடம்பெறும் எனவும் சங்கிலிய மன்னன் நினைவு தினக் குழு அறிவித்துள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)