யாழில் உச்சம் தொட்டது தக்காளியின் விலை!(Video, Photo)

யாழ்.மாவட்டத்தில் தக்காளியின் விலை தற்போது உச்சம் தொட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) ஒரு கிலோ தக்காளியின் விலை 950 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 700 ரூபா முதல் 800 ரூபா வரை திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, தற்போது ஏனைய மரக்கறிகளின் விலைகளும் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)