கொடியேற்றத்துடன் ஆரம்பமானது ஏழாலை அத்தியடி விநாயகர் மஹோற்சவம்(Photo)

‘ஏழாலை’ எனும் கிராமம் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மை வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(05.6.2022) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-6 மணிக்கு கற்பூரத் திருவிழாவும், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-6.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 13 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் காலை உற்சவம் காலை-8.30 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-4.30 மணிக்கும் ஆரம்பமாகும். விசேட உற்சவ தினங்களான கொடியேற்றம், தேர், தீர்த்த உற்சவ தினங்களில் காலை உற்சவம் காலை-6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)