ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று

ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(19.06.2022) மாலை-6 மணிக்கு ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர்(ஏழு கோவில் சிவன்) ஆலய முன்றலில் நடைபெறும்.

மேற்படி பொதுக் கூட்டத்தில் அனைத்து இளைஞர் சபை உறுப்பினர்களையும் மற்றும் புதிதாக நிர்வாகத்தில் இணைய விரும்புவோரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு மேற்படி சபையின் தற்போதைய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்படி பொதுக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)