ஏழாலை இந்து இளைஞர் சபைக்குப் புதிய நிர்வாகம்(Video, Photo)

ஏழாலை இந்து இளைஞர் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(19.06.2022) மாலை-6 மணியளவில் ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் (ஏழு கோவில் சிவன்) ஆலய முன்றலில் இடம்பெற்றது.

மேற்படி பொதுக் கூட்டத்தில் ஏழாலை இந்து இளைஞர் சபையின் புதிய தலைவராக ம. மதுஷன், உபதலைவராக ம.சுரேஷ், செயலாளராக ம. சுவர்ணன், உப செயலாளராக ஜெ.சஞ்சீவ்,பொருளாளராக செ.சுஜீவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆறு பேர் சபை உறுப்பினர்களாகவும், மூவர் சபையின் ஆலோசகர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும்-27 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பிலும், ஏழாலை இந்து இளைஞர் சபையை மேலும் அபிவிருத்தி செய்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஏழாலை இந்து இளைஞர் சபையின் செயலாளர் ம.சுவர்ணன் தெரிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்)