யாழில் எரிபொருள் பங்கீட்டு அட்டை விநியோகம்

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்பட உள்ள பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்தத் திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையைப் பெற்றுக் கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

(செ.ரவிசாந்)