குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் வரவேற்பு நுழைவாயில் திறந்து வைப்பு(Videos, Photos)

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயத்தின் முன்னாள் தலைவரும், ஓய்வுநிலை அதிபருமான அமரர். அப்பாசியர் சின்னத்தம்பி சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவர்களால் மேற்படி ஆலயத்தின் தெற்குப் பக்கமாகப் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயில் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை(18.6.2022) மேற்படி ஆலயத் தலைவர் கந்தையா சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் https://youtu.be/3KqCF5xTzjgதெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வரவேற்பு நுழைவாயிலைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துச் சிறப்புரை நிகழ்த்தினார்.

திறப்பு விழா நிகழ்வில் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள், குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத் தலைவர் சோ.பரமநாதன், குப்பிழான் வடக்கு முன்னாள் கிராம சேவகர் செ.ஞானசபேசன், சிற்பக் கலைஞர் ராஜகோபால் தியாகராஜன், சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர், அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜகோபால் தியாகராஜன் தலைமையிலான கலைஞர்கள் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய வகையில் குறித்த வரவேற்பு நுழைவாயிலை அமைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு, காணொளிகள் மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)