ஏழாலை இலந்தைகட்டி பாதாள ஞானவைரவர் அலங்கார உற்சவம்(Photos)

யாழ்.ஏழாலை இலந்தைகட்டி ஸ்ரீ பாதாள ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-5 மணிக்கு அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகிறது.

நாளை மறுதினம்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் இவ்வாலய உற்சவம் நிறைவு பெறும்.மறுநாள்-29 ஆம் திகதி புதன்கிழமை பகல் மகேஸ்வர பூசை(அன்னதானம்) நடைபெறும் எனவும் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)