இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்!

இன்று திங்கட்கிழமை(27.6.2022) நள்ளிரவு முதல் எதிர்வரும்-10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இன்று திங்கட்கிழமை(27.6.2022) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.