மானிப்பாயில் நாளை யூலை நாடகக் கொண்டாட்டம் நிகழ்வு

பூராயம் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் யூலை நாடகக் கொண்டாட்டம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(30.7.2022) மாலை-5 மணிக்கு மானிப்பாய் நகர மண்டபத்தில் நடைபெறும்.

நிகழ்வில் மூன்று தடவை அரச ஊழியர்களுக்கான நாடகப் போட்டியில் தொடர்ந்து சிறந்த நடிகர் விருதுபெற்ற நாடகக் கலைஞர் நா.கிருபாகரன் நடிக்கும் சண் நாடகக் குழுவின் ‘தலையெழுத்து’, ‘வீட்டுக்காரன்’ ஆகிய நாடகங்களும், செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ‘எங்கே போனார் எலியார்’ சிறுவர் நாடகமும், ‘சவரக் கத்தியும் குரல்வளையும்’ ஆகிய நாடகங்களும் மேடை ஏற்றப்பட உள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)