இளவாலையில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்

இளவாலை புனித யூதாததேயூ இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(31.7.2022) யாழ். இளவாலையில் அமைந்துள்ள புனித யூதாததேயூ ஆலய முன்றலில் இடம்பெறும்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர் களையும் கலந்து கொள்ளுமாறும், இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0773292326 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)