யாழ்.கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்(Photos)

கடந்த-01.08.2007அன்று யாழில் வைத்து அரச பயங்கரவாதத்தினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(01.8.2022) மாலை-5.45 மணியளவில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி.வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)