நாளை ஆரம்பமாகிறது குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மஹோற்சவம்

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(02.8.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-6 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-7 மணிக்குத் திருமஞ்சத் திருப் பவனியும், 8 ஆம் திகதி முற்பகல்-11.30 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-7 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 10 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு 7.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற உள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)