மகிழ்ச்சியான செய்தி: சனி, ஞாயிறு மின்வெட்டு இல்லை!

வார இறுதி நாட்களான நாளை சனிக்கிழமையும்(06.8.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(07) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை(05) இரவு நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக இலங்கையில் மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.