கொழும்பில் நாளை மக்கள் பேரணி

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அரச பயங்கரவாதச் சட்டங்களை மீளப் பெறு!, கைது செய்த போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்! ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் மக்கள் பேரணி நாளை சனிக்கிழமை(06.8.2022) கொழும்பில் இடம்பெற உள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணையும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் ஒழுங்கமைக்கப்படும் மேற்படி மக்கள் பேரணி நாளை பிற்பகல்-1 மணிக்கு கொழும்புத்துறை கொழும்பு கிருலப்பனை அத்துளத் முதலி மைதானத்தில் ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல்-3 மணிக்கு நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்த வெளியரங்கில் பொதுக் கூட்டமும் இடம்பெறும் என மேற்படி போராட்ட ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)