யாழ்.நகரில் நாளை இரத்ததான முகாம்

இலங்கை வங்கியின் 83 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டின் எதிரொலியாகவும் யாழ்.மாவட்ட இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(07.8.2022) காலை-8.30 மணி முதல் பிற்பகல்-1.30 மணி வரை யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைவங்கி ஸ்ரான்லி வீதிக் கிளை அலுவலகத்தில் இடம்பெறும்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)