கிராம வலம் வந்தார் யாழ்.குப்பிழான் கற்பக விநாயகன்(Photos)

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.8.2022) கிராம ஊர்வலம் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்றுக் காலை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற அபிஷேகம், பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை-9.30 மணியளவில் ஆலய முன்றலிலிருந்து அடியவர்களின் அரோகராக் கோஷத்துடன் விநாயகப் பெருமானின் கிராம ஊர்வலம் ஆரம்பமானது.

அடியவர்கள் தங்கள் இல்ல வாசல்கள் தோறும் பூரண கும்பம் வைத்தும், நைவேத்தியங்கள் படைத்தும், அர்ச்சனை செய்தும் விநாயகப் பெருமானைப் பக்திபூர்வமாக வரவேற்றனர்.

கிராமம் முழுவதும் ஊர்வலமாக வலம் வந்த கற்கரைக் கற்பக விநாயகப் பெருமான் மீண்டும் இரவு-8 மணியளவில் தனது இருப்பிடத்தைச் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுக்குப் பிராயச்சித்த அபிஷேகமும் இடம்பெற்றது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)