ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீனாவின் சர்ச்சைக்குரிய பெரும் கப்பல்(Photos)

சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங்-5(Yuan Wang-5) ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை(16.8.2022) காலை-7.50 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக் கடற்பரப்பான SEA OF SRILANKA பிராந்தியத்திற்குள் நேற்றுத் திங்கட்கிழமை (15) பிற்பகல் பிரவேசித்திருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச உள்ளிட்டோர் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, மேற்படி கப்பல் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் எதிர்வரும்- 22 ஆம் திகதி வரையான ஏழு நாட்கள் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்க வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.