யாழ்.திருநெல்வேலியில் நடந்தேறிய அக்னி இளைஞர் அணியினரின் இரத்ததான முகாம்(Photos)

யாழ்.திருநெல்வேலியைத் தளமாக கொண்டு இயங்கும் அக்னி இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் Northway Family Mart இன் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(14.8.2022) யாழ்.திருநெல்வேலி சிவன் வீதியில் உள்ள ஜே-110 கிராம அலுவலக முன் மண்டபத்தில் இடம்பெற்றது.

காலை-9 மணி முதல் பிற்பகல்-2.30 மணி வரை நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 34 பேர் குருதிக் கொடை வழங்க முன்வந்த போதிலும் அவர்களில் உரிய பரிசோதனைகளின் அடிப்படையில் 28 பேர் குருதிக் கொடை வழங்குவதற்குத் தகுதி பெற்று ஆர்வத்துடன் குருதிக் கொடை வழங்கினர். இவர்களில் ஆறு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் கலந்து கொண்டு குருதி சேகரிப்பில் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)