ஆரம்பமாகிறது தெல்லிப்பழை மகாதனை கோணாசீமா நரசிங்க வைரவர் அலங்கார உற்சவம்(Photos)

யாழ்.தெல்லிப்பழை மகாதனை கோணாசீமா நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை மறுதினம்-19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-5 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 12 தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற உள்ளதுடன் 12 தினங்களும் மாலை-5 மணிக்கு ஆரம்பமாகி அபிஷேகம், பூசை, வைரவப் பெருமான் திருவீதி உலா என்பன இடம்பெறும்.

அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான எதிர்வரும்-30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-8 மணி முதல் 108 கலச சங்காபிஷேகம், விசேட பூசை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெறும்.

அன்றையதினம் மாலை-5 மணியளவில் திரு ஊஞ்சலைத் தொடர்ந்து பூந்தண்டிகையில் சுவாமி வீதி வலம் வரும் திருக்காட்சியும் நடைபெறும் என மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)