இணுவிலில் நாளை முன்பள்ளி விளையாட்டு விழா

கோண்டாவில் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கமும் இணுவில் அண்ணா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் அண்ணா முன்பள்ளியின் விளையாட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை(19.8.2022) பிற்பகல்-2 மணியளவில் மேற்படி நிலைய முன்றலில் இடம்பெற உள்ளது.

அண்ணா சனசமூக நிலையத் தலைவர் சு.காந்தரூபன் தலைமையில் நடைபெறும் மேற்படி விளையாட்டு விழா நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இதேவேளை, மேற்படி விழா நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)