யாழ்.இந்துக் கல்லூரியில் ஹிந்தி மொழிக் கற்கை நெறி ஆரம்பம்(Photos)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தினால் நேற்று முன்தினம் புதன்கிழமை(17.8.2022) காலை ஹிந்தி மொழிக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வகுப்பின் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன், யாழ்.இந்தியத் துணைத் துணைத் தூதரக அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கற்கை நெறியின் வளவாளராக முன்னாள் களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஹாந்தி டீ சொய்சா கடமையாற்றுவார்.

இதேவேளை, குறித்த கற்கைநெறி வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை முடிவடைந்ததும் இடம்பெறும். பழைய மாணவர்களும் பங்கேற்கலாம் எனவும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)