இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை கிருஷ்ண ஜெயந்தி திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலய கிருஷ்ண ஜெயந்தி திருவிழா நாளை சனிக்கிழமை(20.8.2022) சிறப்பாக இடம்பெற உள்ளது.

முற்பகல்-11 மணிக்கு அபிஷேகம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மாலை-6 மணிக்கு வசந்தமண்டப பூசையும் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண பெருமான் திருவீதி உலா வந்து ஆலய வடக்கு வீதியில் உறியடி உற்சவமும் நடைபெறும்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)