கோப்பாய் சக்கராழ்வாருக்கு நாளை தேர்த் திருவிழாவும் உறியடி உற்சவமும்(Photos)

யாழ்.கோப்பாய் வடக்கு ஸ்ரீசக்கராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழாவும் உறியடி உற்சவமும் நாளை சனிக்கிழமை(20. 8.2022) மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.

நாளை காலை-6.30 மணிக்கு காலைப் பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து காலை-8.30 மணியளவில் சக்கராழ்வார் சித்திரத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியும் இடம்பெறும்.

மாலைப் பூசை மாலை-6 மணியளவில் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றுத் தொடர்ந்து சீனடி சிலம்படி விளையாட்டுக்களுடன் உறியடி உற்சவமும் நடைபெறும்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)