சிறப்பிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் புதிய குபேரவாசல் குமார வாசல் கோபுர கலசாபிஷேகம்(Photos)

‘அலங்காரக் கந்தன்’ எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம் நல்லைக் கந்தன் பெருந் திருவிழாவின் திருக்கார்த்திகை உற்சவ நன்னாளான இன்று வெள்ளிக்கிழமை(19.8.2022) காலை-6 மணிக்கு வெகுசிறப்பாக இடம்பெற்றது.

வசந்தமண்டபப் பூசை வழிபாடு, விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சண்முகப் பெருமான் வீதி உலா வந்து புதிய குபேர திக்கு குமாரவாசல் ஸ்ரீ குமார கோபுர வாசல் திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு அதன் ஊடாகச் சண்முகப் பெருமான் எழுந்தருளியதைத் தொடர்ந்து அந்தணச் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் ஓத அடியவர்களின் அரோகராக் கோஷத்துடன் கலாசாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நல்லைக் கந்தனின் புதிய குபேரவாசல் குமார வாசல் கோபுரம் கலசாபிஷேகத்தைக் காண்பதற்காக ஆலய வீதியில் திரண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)