துர்க்கை அம்பாளின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு தெல்லிமாநகர் விழாக் கோலம்(Photos)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை புதன்கிழமை(07.9.2022) காலை-9 மணியளவில் வெகுவிமரிசையாக இடம்பெற உள்ளது.

இதனை முன்னிட்டு மேற்படி ஆலயச் சூழலும் அதனை அண்டியுள்ள பகுதிகளும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் துர்க்கை அம்பாள் தேர்த் திருவிழா நாளில் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றமையால் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ளும் அடியவர்கள் தங்க ஆபரணங்களை அணிந்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலய நிர்வாகமும், தெல்லிப்பழைப் பொலிஸாரும் அடியவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு படங்கள்:-செ.ரவிசாந்)