தெல்லிநகர் துர்க்காதேவிக்கு நாளை தேர்த் திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை புதன்கிழமை(07.9.2022) காலை சிறப்பாக இடம்பெறும்.

நாளை காலை-6.30 மணியளவில் கொடிதம்ப பூசையும், காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து காலை-9 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனியும் நடைபெற உள்ளது என மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)