உணவுக் கையிருப்புப் பாவனை மற்றும் போஷாக்கு உறுதிப்பாடு: ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் இணையவழிக் கலந்துரையாடல்(Photos)

உணவுக் கையிருப்புப் பாவனை மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காகக் கிராமியப் பொருளாதாரப் புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16.9.2022) ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் இணையவழி மூலம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)